உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 11ஆவது பாதுகாப்பு கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு உதவும் வகையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்தார்.
இந்த செயலியில் பாதுகாப்பு கண்காட்சியின் வரைபடம், அனைத்து பேச்சாளர்களின் விவரங்கள், அமர்வுகள் மற்றும் அவற்றின் நேரங்களை விவரிக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளது.
மேலும் நிகழ்வு தொடர்பான செய்திகளும் அதில் அடங்கியிருக்கும். நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “இந்த செயலில் பொதுமக்களின் பயன்பாட்டின் போது ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அதனை தீர்க்கும் ஒரு தளத்தையும் உருவாக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
இதனால் பார்வையாளர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் அவர்கள் எளிதில் பதிவு செய்யலாம்.
இதையும் படிங்க: விமானத்தில் பிரக்யா சிங் தாகூர் தர்ணா?