ETV Bharat / bharat

அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் இல்லை - வேதனைத் தெரிவிக்கும் கர்நாடக அரசு

விவசாயிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்தத் தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும், இவர்களது கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்த முதலில் இவர்களைப் பற்றிய தரவுகள் வேண்டும் எனவும் கர்நாடக மாநில அமைச்சர் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா
author img

By

Published : Apr 18, 2020, 5:29 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமைப்பு சாரா ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவ நாடு முழுவதும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நேரடி மானியத் திட்டத்தின் கீழ் உதவ, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது கணக்குகள் குறித்தத் தரவுகள் தங்களிடம் இல்லை என கர்நாடக மாநில அரசு வேதனைத் தெரிவித்துள்ளது.

விவசாயிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்தத் தகவல்கள் தங்களிடம் இல்லை எனவும், இவர்களது கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்த முதலில் இவர்கள் குறித்த தரவுகள் வேண்டும் எனவும் அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர் தெரிவித்துள்ளார்

கரோனா தொற்றால் ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து இதுபோன்ற இக்கட்டான சூழல் நேரும் என தாங்கள் நினைக்கவில்லை என்றும் இந்தக் கொள்ளை நோய் காலம் தங்களைப் பொறுத்தவரை அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த தரவுகளை சேகரிக்க ஒரு வாய்ப்வை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சாதாரண நாள்களில் பயனாளர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை, தங்களது துறையைச் சேர்ந்தவர்களும் இதுகுறித்து சிந்திக்கவில்லை. இத்தகைய காலக்கட்டத்தில் பட்டினியால் ஒருவர்கூட இறக்க நேரிடக் கூடாது என்பதில்தான் அரசு கவனம் செலுத்துகிறது, மக்களுக்குத் தேவையான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் கிராம, தாலுகா, நகர அளவில் மூன்றடுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

மேலும் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பதை வலியுறித்தி அரசு அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும், இதில் செயல்பட முடியாமல் தத்தளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் விரைந்து சில முடிவுகள் எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மரணங்களால் வெறிபிடித்து அலையும் உலகம் - எண்களாக மாறிப்போன மனிதர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.