ETV Bharat / bharat

'சீரியல் கில்லர்' சயனைடு மோகனுக்கு ஆயுள் தண்டனை - சயனைடு மோகன் கொலை வழக்கு

பெங்களூரு : கேரள இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் தொடர் கொலைகாரன் சயனைடு மோகன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Cyanide Mohan, சயனைடு மோகன்
Cyanide Mohan
author img

By

Published : Feb 18, 2020, 1:39 PM IST

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரத்தி (23). கடந்த 2006ஆம் ஆண்டு, இவர் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று உள்ளார். அப்போது, மோகன் குமார் என்பவர் தான் ஒரு ஆசிரியர் என அந்தப் பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார்.

பின்னர், ஒரு வாரம் கழித்து ஆரத்தியின் வீட்டிற்குச் சென்ற மோகன், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். ஆரத்திக்கும், மோகனைப் பிடித்துப் போக இருவரும் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர். பின்னர், அதே ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி "பிக்னிக்" செல்வதாகப் பொய் சொல்லி விட்டு ஆரத்தி, மோகன் குமாருடன் மைசூருக்குச் சென்று உள்ளார்.

அங்கு லாட்ஜ் ஒன்றை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். பின்னர், மறு நாள் காலை ஆரத்தியை கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்ற மோகன், "நீ அணிந்திருக்கும் தங்க நகைகளை என்னிடம் கழற்றிக் கொடு" என கூறியுள்ளார். ஆரத்தியும், தனது நகைகளை மோகனிடம் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மோகன் கொடுத்த சயனைடு கலந்த மாத்திரையை ஆரத்தி சாப்பிட்டுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் கழிவறையில் ஆரத்தி சுருண்டு விழுந்து பலியாகியுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பான வழக்கு, மங்களூரு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சயீதுனிசா, மோகன் குமார் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மோகன் குமார், இது போன்று பலப் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து, சயனைடு கொடுத்து கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தான் அவர் சயனைடு மோகன் குமார் என பரவலாகப் பேசப்பட்டார்.

இதற்கு முன்னர் சயனைடு மோகனுக்கு எதிராகப் பதியப்பட்ட 18 வழக்குகளிலும், அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிர்பயா குற்றவாளிகளுக்கு 3ஆம் தேதி தூக்கு; நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.