ETV Bharat / bharat

மரங்களை வெட்டுவதற்கு ஆதரவளிக்கும் மத்திய அமைச்சர்!

மெட்ரோ பணிமனைக்காக ஆரே வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட்டுவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசியல் கட்சியினர் செயல்படுங்கள் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

prakash javadekar
author img

By

Published : Oct 5, 2019, 6:03 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆரே வனப்பகுதியில், மெட்ரோ பணிமனைக்காக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரே காலனி மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "உலகத்திலேயே மெட்ரோ சேவை டெல்லியில் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெல்லி மெட்ரோ கட்டப்படுவதற்கு பல மரங்கள் வெட்டப்பட்டன, ஆனால் தற்போது மெட்ரோ கட்டப்பட்டு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அதனை அன்றாடம் உபயோகித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இரண்டுமே நாட்டினை மேம்படுத்தும். நாட்டின் வளர்ச்சிக்காக இரண்டும் சரிசமமான அளவிலேயே கொண்டு செல்லப்படுகிறது.

அதேபோல், மும்பையில் உள்ள ஆரே வனப்பகுதியில் அமைக்கப்படும் மெட்ரோ பணிமனைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரம் வெட்டினால் அதே இடத்தில் ஐந்து மரங்கள் நடப்படும். ஆரே காலனியில் வசிக்கும் மக்கள் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரங்களை வெட்டுவது நோக்கமல்ல, நாட்டின் வளர்ச்சியும் முக்கியம். மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை ஒப்புக்கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: மரங்களை வெட்டியதற்கு ஆதித்யா தாக்கரே கண்டனம்!

Intro:Body:

Prakash Javedkar

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.