ஆந்திரா: பசியின் கொடுமையால் மாடுகள் மண்ணை தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் சங்கமேஸ்வரம், ஜனலகுடெம் நல்லமல்லா வனப்பகுதியில் மாடுகள் மண்ணை தின்னும் நிகழ்வு நடந்தேறிவருகிறது. அவைகளால் பசியையோ அல்லது வேறெதையோ பொறுத்துக்கொள்ள முடியாமல் மண்ணை மணிக்கணக்கில் தின்கின்றன.
கோட்டப்பள்ளி கால்நடை மருத்துவர் புவனேஷ்வரியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்குமாறு கேட்டபோது, மரபணு அறிகுறிகளால் சில மாடுகள் மண்ணை தின்பது தெரியவந்தது. வன விவசாயிகள் மாடுகளை காடுகளுக்கு தீவனத்திற்காக அனுப்பியுள்ளனர்.
ஒரு மாடு மண்ணை தின்றால், பிற மாடுகளும் அதே முறையைப் பின்பற்றும் என்று அவர் கூறினார். கால்நடைகள் உண்ணும் மண், வேறு நோய்களுக்கு அவைகளை ஆளாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மேலும், அவற்றை உடனடியாக அந்தந்த இடத்திலுள்ள கால்நடை மருத்துவர்களிடம் காட்ட வேண்டுமென்றும் அவர் பரிந்துரைத்தார்.