ETV Bharat / bharat

மூன்று பேர் கரோனா தடுப்பூசி பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளனர் - ஹர்ஷ் வர்தன் - கரோனா இந்தியா

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க மத்திய அரசு அனைத்துவித ஆதரவுகளையும் வழங்கி வருகிறது என்றும், தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படும் மூன்று பேர், வெவ்வேறு சோதனைக் கட்டங்களில் உள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று (செப்.20) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்
author img

By

Published : Sep 21, 2020, 6:56 PM IST

கரோனா வைரஸ் தொற்று குறித்து மக்களவையில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் பதிலளித்த ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் இதுவரை 6.37 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இதனால் உலகில் அதிக எண்ணிக்கையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கலாம் என்றும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 கரோனா வைரஸ் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அதில், ”விமான நிலையங்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டபோது, ​​எல்லையில் 16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆரம்ப நாட்களில் இந்த நோய் குறித்து மருத்துவர்களுக்கே போதிய தகவல்கள் தெரியவில்லை. இருப்பினும், இரண்டு முதல் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது திறன் மேம்பாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர்.

கரோனா ஊரடங்கின் பலன்கள், குறைபாடுகள் குறித்து பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். கரோனாவால் பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், தவிர்க்கப்பட்ட இறப்புகள் குறித்து ஐந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை குறித்த அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

கரோனா ஒரு கொள்ளை நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும் முன்னரே, ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களையும் முன்னெச்சரிக்கை செய்து விட்டோம். நாங்கள் ஒரு விரிவான சுகாதார ஆலோசனையை வழங்கியிருந்தோம். சமூகத்தையும் கண்காணித்து வந்தோம்.

கடந்த சனிக்கிழமை (செப்.19) வரை கிட்டத்தட்ட 12 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், கரோனா பரிசோதனை வசதி கொண்ட ஒரே ஒரு ஆய்வகம் மட்டுமே இந்தியாவில் இருந்த நிலையில், தற்போது 1,773 ஆய்வகங்கள் உள்ளன.

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 30 பேர் மீது தடுப்பூசி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று பேர் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளனர்

’மேக் இன் இந்தியா’ வென்டிலேட்டர்களை வாங்குவதற்காக சுகாதார அமைச்சகத்திற்கு பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 893 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படை, அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து 11,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேசிய பாதுகாப்பு சட்டம்: நாடு முழுவதும் 1,200 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.