இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த கோவிட் -19 வைரசால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்தனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் கோவிட் -19 வைரஸ் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் பிரத்யேக மருத்துவமனை உருவாக்க அம்மாநில அரசு தனியார் இரண்டு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அதன்படி, 950 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அந்த மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான நிதியை ஒடிசா மாநிலத்தின் இரண்டு பொது நிறுவனங்கள் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவமனை ஏப்ரல் 15ஆம் தேதி தயாராகிவிடும் என கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் இதுவரை மூன்று பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: கேரளாவில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்