மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் கரோனா வைரஸால் 39,173 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது 58,302 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேசமயம் இத்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,163ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் அதிக பாதிப்புககுள்ளான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,058ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து குஜராத்தில் 11,745 பேரும், தமிழ்நாட்டில் 11,760 பேரும் இத்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,054ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர ராஜஸ்தான் (5,507), மத்தியப் பிரேதசம் (5,236), உத்தரப் பிரதேசம் (4,605) ஆகிய மூன்று மாநிலங்களில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 2,825 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 2,474 பேரும், பஞ்சாப்பில் 1,980 பேரும், தெலங்கானாவில் 1,597 பேரும், பிகாரில் 1,391 பேரும், ஜம்மு காஷ்மீரில் 1,289 பேரும் கர்நாடகாவில் 1,246 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகள் பதிவான மாநிலங்களின் பட்டியலில், ஹரியானா (928), கேரளா (630), ஒடிசா (876), ஜார்க்கண்ட் (223), சண்டிகர் (196), திரிபுரா (167), அசாம் (107) ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல், உத்தரகாண்ட் (93), இமாச்சலப் பிரேதசம் (90), கோவா (38) ஆகிய மாநிலங்களில் 100க்கும் குறைவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதேசமயம், கரோனாவால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மகாராஷ்டிராவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இத்தொற்றால் 1,249 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குஜராத்தில் 694 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 252 பேரும் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள்!