நாட்டில் கரோனா வைரஸால் நேற்று ஒரேநாளில் புதிதாக 2,293 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 36ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 218 ஆகவும் அதிகரித்துள்ளது.
மாநிலங்களை பொறுத்தவரையில் நேற்று ஒரேநாளில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் நேற்று மட்டும் ஆயிரத்து எட்டு பாதிப்புகளும், 71 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன
நோய் தொற்றின் தாக்கம் ஒருபக்கம் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று ஆயிரத்து 62 பேர் இத்தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர். இதனால், நாட்டில் இதுவரை 9 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
இதனிடையே, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 17ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பார்க்கலாம்.
மாநிலங்கள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் | குணமடைந்தவர்கள் |
மகாராஷ்டிரா | 11,506 | 485 | 1,879 |
குஜராத் | 4,721 | 236 | 735 |
டெல்லி | 3,738 | 61 | 1,167 |
மத்தியப் பிரதேசம் | 2,719 | 145 | 524 |
ராஜஸ்தான் | 2,666 | 62 | 1,116 |
தமிழ்நாடு | 2,526 | 28 | 1,312 |
உத்தரப் பிரதேசம் | 2,328 | 42 | 654 |
ஆந்திர பிரதேசம் | 1,463 | 33 | 403 |
தெலங்கானா | 1,039 | 26 | 441 |
மேற்கு வங்கம் | 795 | 33 | 139 |
ஜம்மு காஷ்மீர் | 639 | 08 | 247 |
கர்நாடகா | 589 | 22 | 251 |
கேரளா | 497 | 04 | 392 |
பஞ்சாப் | 480 | 19 | 90 |
பீகார் | 471 | 03 | 98 |
ஹரியானா | 360 | 04 | 227 |
ஒடிசா | 149 | 01 | 55 |
ஜார்க்கண்ட் | 111 | 03 | 20 |
சண்டிகர் | 88 | 0 | 17 |
உத்தரகாண்ட் | 58 | 0 | 36 |
அசாம் | 43 | 01 | 32 |
சத்தீஸ்கர் | 43 | 0 | 36 |
இமாச்சலப் பிரதேசம் | 40 | 01 | 30 |
அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 33 | 0 | 16 |
லடாக் | 22 | 0 | 17 |
மேகாலயா | 12 | 01 | 0 |
புதுச்சேரி | 8 | 0 | 5 |
கோவா | 7 | 0 | 7 |
திரிபுரா | 2 | 0 | 2 |
மணிப்பூர் | 2 | 0 | 2 |
அருணாச்சல பிரதேசம் | 1 | 0 | 1 |
மிசோரம் | 1 | 0 | 0 |
இதையும் படிங்க: சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த தொழிலாளி: உதவிய துணை வட்டாட்சியர்!