கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இதற்கிடையில் பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21 ஆயிரத்து 138 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 35 ஆயிரத்து 878ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “பிரேசில் நாடு மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் பிரேசில் நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் கரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: நாட்டில் கரோனா பாதிப்பு: 1 கோடியை நோக்கி...!