கரோனா வைரஸ் நோயால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பல்வேறு தரப்பினர் அடிப்படை வசதிகளின்றி தவித்துவருகின்றனர். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் தடையில்லா சேவை வழங்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "சந்தாதாரர்களுக்கு தடையில்லா சேவை வழங்க வேண்டும். கரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் பொது மக்களின் நலன் கருதி மற்றவர்களின் ஒத்துழைப்போடு இதனை மேற்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவியும். வீட்டிலிருக்கும் மக்களுக்கு நம்பத்தகுந்த செய்திகள், தகவல்கள் அளித்து அவர்களை பொழுதுபோக்குடன் வைத்துக்கொள்வது முக்கியமாகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் கண்டறியும் மையங்கள் எங்குள்ளது, அத்தியாவசியப் பொருள்கள் எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கள் மக்களிடையே சென்று சேரும் வகையில் செய்திகள் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் 420 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!