கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள கத்ரி கம்பாலாவின் சாலையில் வடிகால் பிரச்னை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் கார்ப்பரேட்டர் கத்ரி மனோகர் செட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற கழிவுக்குழாயை சரிசெய்யுமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் ஊழியர்கள் கழிவுக்குழாய்க்குள் செல்ல மறுத்துள்ளனர். இதனால் கார்ப்பரேட்டர் கத்ரி மனோகரே கழிவுக்குழாய்க்குள் நான்கு ஊழியர்களுடன் இறங்கி பழுதை நீக்கியுள்ளார்.
மங்களூரு கத்ரி கம்பாலா மக்களின் நீண்ட ஆண்டு பிரச்னையை கார்ப்பரேட்டர் கத்ரி மனோகரே இறங்கி சரிசெய்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க...திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்: நோய்த்தொற்று ஏற்படும் இடர்!