ETV Bharat / bharat

கரோனா உயிரிழப்பு 811ஆக உயர்வு!

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 198ஆக அதிகரித்துள்ளது எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

Coronavirus death
Coronavirus death
author img

By

Published : Feb 9, 2020, 12:28 PM IST

Updated : Mar 17, 2020, 6:08 PM IST

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வூஹான் நகரம், கரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. கனடா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், நாளுக்கு நாள் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று காரணமாக 811 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டாயிரத்து 656 பேருக்கு நோய் பரவியிருப்பதாகச் சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 10 நாள்களில் புதிய மருத்துவமனையையும் சீனா கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் மருத்துவ குணமிக்க ஆடைகள் விற்பனை

Last Updated : Mar 17, 2020, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.