ETV Bharat / bharat

கரோனா வைரஸ் - உயிரிழப்பு 80ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது

Coronavirus
Coronavirus
author img

By

Published : Jan 27, 2020, 12:23 PM IST

Updated : Mar 17, 2020, 4:59 PM IST

2003ஆம் ஆண்டு சீனாவை கலங்கடித்த கொரோனா வைரஸ் மீண்டும் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளையும் கிறங்கடித்துவருகிறது. சீனாவில் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸால் சீனாவில் மட்டும் இரண்டாயிரத்து 700க்கும் இந்நோயின் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மூன்று பேர், தாய்லாந்தில் ஏழு பேர், கொரியவில் மூன்று பேர் இந்நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனர்கள் பல்வேறு வகை உயிரினங்களை உண்பதே கரோனா வைரஸ் தாக்குதலுக்கான மிக முக்கிய காரணமாகக் கருதப்படும் நிலையில், நாடு முழுவதும் விலங்குகளின் இறைச்சி மட்டுமன்றி கடல் உணவுகளின் விற்பனைக்கும் தடை விதிக்கப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

மேலும், கரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் வூகான் நகரில் இருந்து மக்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லவும் பிற இடங்களில் இருந்து அந்த நகருக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் உள்ள ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குப் பரவாமல் இருக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவிவருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சினாவை தவிர ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஏழு ஆசிய நாடுகளில் இந்நோய் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள வூகான் நகரலிருந்து கரோனா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பரவவிடாமல் தடுக்கும் நோக்கில் விமான நிலையங்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இதுவரை 137 விமானங்களில் 29,700 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், யாரும் கரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று சோதனையில் தெரியவந்துள்ளது. நேற்று மட்டும் 22 விமானங்களில் 4,359 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'அம்மா உணவகம்' போன்று மகாராஷ்டிராவில் குறைந்த விலை உணவு மையம்!

Last Updated : Mar 17, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.