புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சில நாள்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றுவிட்டு திரும்பியுள்ளார். அவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்குள்ள சிறப்பு வார்டில் வைக்கப்பட்ட அவருக்கு இரண்டு நாள்களாகச் சிகிச்சையளித்தும் காய்ச்சல் குறையாததால் அவரது ரத்த மாதிரியை புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு கரோனா தொற்று உள்ளதாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இரண்டு நாள்களுக்குள் அவரது ரத்த மாதிரி கிடைக்கப்பெறும் என்றும், அதில் அவருக்கு கரோனா தொற்று உள்ளதா எனவும் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவிலிருந்து நாடு திரும்பிய மாணவி மருத்துவமனையில் அனுமதி!