ETV Bharat / bharat

'தலையில்லாத' காங்கிரஸ் கட்சி: சீமான் விமர்சனம்! - Congress is wandering like a headless Mundam

புதுச்சேரி: தலையில்லாமல் அலைகிற கட்சியாக காங்கிரஸ் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பேசும் சீமான்
author img

By

Published : Oct 17, 2019, 7:56 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பிரமிளா மதியழகனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ' காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்வு செய்துவிட்டு, தலை இல்லாமல் அலைகிறது. ராஜீவ் காந்தி கொலை குறித்து நான் பேசியது வரலாறு ஆகும்.

பொதுக்கூட்டத்தில் பேசும் சீமான்

எங்கள் இனப் பகைவன் காங்கிரஸ், அதேபோல் எங்கள் இனத்துரோகி திமுக. இவர்கள் செய்வதை வேடிக்கை பார்ப்பவர்கள் தான் பாஜகவினரும், அதிமுகவினரும் ஆவார். காசு கொடுத்தால் தான் வாக்கு என்றால், அப்படிப்பட்ட வாக்குபோடத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அப்போது நாங்கள் போராடினோம். ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சி எங்களை எதிர்த்துப் போராடி வருகிறது. இது எங்கள் கட்சியின் வளர்ச்சியைக் காட்டுகிறது' என்றார்.

இதையும் படிங்க :சீமான் மீது தேசதுரோக வழக்குப்பதிய வேண்டும் - காங். எம்.பி. ஜெயக்குமார்

Intro:காங்கிரஸ் கட்சி தலைவர் செய்து தேர்வு செய்துவிட்டு தலை இல்லா முண்டம் போல் அலைகிற கட்சியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்

Body:புதுச்சேரியில் இன்று காமராஜர் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரமிளா மதியழகன் ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசினார் அப்போது பேசிய அவர்

காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்வு செய்துவிட்டு தலை இல்லா முண்டம் போல் அலைகிறது ஒரு கட்சி காங்கிரஸ் கட்சி என்றார் ராஜீவ் காந்தி பற்றி நான் பேசியது வரலாறு என்றும் கூறினார்

எங்கள் இனப் பகைவன் காங்கிரஸ் என்றும் எங்கள் இனத்துரோகி திமுக என்றும் மேலும் எங்கள் தமிழ் இனத்தை கொன்று குவித்த அவர்கள் தான் இந்த காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்காரர்கள் மற்றும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதிமுக கட்சிகள் என்று கடுமையாக தாக்கிப் பேசினார் காசு கொடுத்தால்தான் ஓட்டு என்றால் அப்படிப்பட்ட ஓட்டு போட தேவையில்லை மேலும் இலங்கையில் எங்கள் தமிழ் இனத்தை கொன்று குவித்து அவர்களின் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் மிகவும் கொடுமையான முறையில் கொன்ற சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்

தமிழ்நாட்டில் அச்சுருத்தும் அணுஉலை வேண்டாம் என்கிறோம் நல்ல திட்டம் தானே அதை புதுச்சேரியில் வைத்துவிடுங்கள் இவ்வளவு காலம் அதிகாரத்தில் இருக்கும் நாராயணசாமி புதுச்சேரிக்கு இன்னும் தனி மாநில உரிமை பெற தர முடியவில்லை ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அப்போது போராடினோம் இப்போது 2019 காங்கிரஸ் கட்சி எங்களை எதிர்த்து போராடி வருகிறார் என்றால் இது எங்கள் கட்சியின் வளர்ச்சி காட்டுகிறது எங்கள் கட்சி சார்பில் பெண் வேட்பாளர்களை நிற்பதற்கு சம உரிமை கொடுத்து கட்சி சார்பில் போட்டியிட வைத்துள்ளோம் அதுபோல புதுச்சேரியிலும் பெண் வேட்பாளர் போட்டிருக்கிறார் என்றார்

Conclusion:காங்கிரஸ் கட்சி தலைவர் செய்து தேர்வு செய்துவிட்டு தலை இல்லா முண்டம் போல் அலைகிற கட்சியாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.