70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கூறுகையில், “காங்கிரஸ் டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாமல் இருக்கும் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும், முதுகலை படித்த இளைஞர்களுக்கு ரூ. 7 ஆயிரமும் யுவ சுபிமான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஒரு மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமின்றி 100 இந்திரா கேண்டின்கள் கட்டப்பட்டு, அதில் ரூ.15க்கு சப்பாடு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க...நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு