கரோனா வைரசைக் கட்டுப்படுத்த 21 நாள்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜுவாலா பேசுகையில், '' நாடு முழுவதும் 21 நாள்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை முழுமனதுடன் வரவேற்கிறோம். இவ்வாறு செய்தால் மட்டுமே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த 21 நாள்களுக்கு ஏழைகளுக்கான நிவாரணம், தினக்கூலிகளுக்கான நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். சிறுகுறு தொழில் செய்வோர் இந்த 21 நாள்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள்’' எனப் பேசியுள்ளார். இதையே பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கும், மருத்துவ செயல்பாடுகளுக்கு மட்டுமே மத்திய அரசு சார்பாக 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: அறமற்ற அலட்சியத்தால் பாமரர்களைப் படுகுழியில் தள்ளாதீர்கள்