ETV Bharat / bharat

பதவி விலகவில்லையென்றால் சாலையில் நடக்க முடியாது: ஆளுநருக்கு எச்சரிக்கை

கோழிகோடு: கேரள ஆளுநர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால் அவர் சாலையில் நடக்கமுடியாது என காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் எச்சரித்துள்ளார்.

congress mp speak about kerala governor
கேரள ஆளுநர் குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி முரளிதரன்
author img

By

Published : Jan 3, 2020, 1:17 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்களின் பதிவேடு (NRC) ஆகியவற்றிற்கு எதிராகக் கேரளாவில் 'தேசத்தை சேமி' என்னும் தலைப்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் பேசியதாவது:

இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்பது குறித்து பலர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

CAB
CAB

உண்மையில் இந்தச் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, கேரள சட்டப்பேரவை குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது.

140 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில், ஒரே ஒரு பாஜக உறுப்பினர் மட்டும் இந்தச் சிறப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பாஜக உறுப்பினர்கூட குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவராக இருக்கக்கூடும் என்று முரளிதரன் கூறினார்.

காங்கிரஸ் எம்பி முரளிதரன்
காங்கிரஸ் எம்பி முரளிதரன்

‘இந்தச் சட்டப்பேரவைத் தீர்மானம் பயனற்றது; காங்கிரஸ் செல்வாக்கின் கீழ் உள்ளது’ என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார். இதற்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆளுநரை எதிர்த்து கண்டனம் தெரிவித்ததுபோல, கேரள ஆளுநரை எதிர்த்து முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆளுநரை எதிர்த்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் எம்.பி. முரளிதரன் கூறியுள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

ஆளுநர் பதவியிலிருந்து அவர் விலகவில்லை என்றால், சாலையில் நடக்க முடியாது என எச்சரித்துள்ளார். மேலும், பேரணியைத் தொடங்கிவைத்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியும் கேரள சட்டப்பேரவைத் தீர்மானம் குறித்து ஆளுநர் கூறிய கருத்துகளைக் கண்டித்தார்.

இதையும் படிங்க: சிஏஏ & என்ஆர்சி நடைமுறைக்கு எதிர்ப்பு: கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.