வெட்டுக்கிளிக் கூட்டம் ஹரியானாவின் குர்கான் பகுதிக்குள் நுழைந்து பயிர்களையெல்லாம் அழித்துள்ளது. மேலும், உத்தரப் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களிலும் இதன் தாக்குதல் தீவிரமடைந்தள்ளது. இதனைக் கட்டுப்பட்ட குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இது குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்குதல் நடத்தும்போது விவசாயிகளும் பொதுமக்களும் கரவொலி, தட்டை தட்டி அதிக ஒலி எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
'பல நேரங்களில் இந்தப் பயனற்ற அரசு கரவொலி, தட்டை தட்டுதல் ஒலி ஆகிய தீர்வை கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்றுக்கு அறிவுறுத்துகிறது. அதேசமயம் மற்ற நேரங்களில்தான் வெட்டுக்கிளித் தாக்குதலுக்கு இதனைப் பயன்படுத்துகிறது' என மத்திய அரசை சாடுகிறார் சுர்ஜேவாலா.
இந்த வெட்டுக்கிளித் தாக்குதலுக்கு வேறு எந்த அறிவியல், பகுத்தறிவுத் தீர்வுகள் அரசிடம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெட்டுக்கிளிக் கூட்டம் ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்களை அழித்துள்ளதாகக் கூறும் ரண்தீப் சுர்ஜேவாலா, தற்போது, இவை டெல்லியிலும் தாக்குதலை நிகழ்த்த தொடங்கியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
இந்த மாநிலங்களைச் சேர்ந்த 84 மாவட்ட விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்த வெட்டுக்கிளிகளால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (ஜூன் 28) பத்து லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான வேளாண்மை நிலம் வெட்டுக்கிளித் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன அவர், ஆனால் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை ராகுல் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய சுர்ஜேவாலா, ஆனால் கரோனா தீநுண்மி போலவே இதிலும் அரசு செயல்படவில்லை எனப் புகார் தெரிவித்தார்.
"பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கின்றன. ஏனென்றால், பிரதமர் நரேந்திர மோடி வெட்டுக்கிளித் தாக்குதலை இயற்கைப் பேரிடர் வரையறைக்குள் கொண்டுவரவில்லை" என அவர் புகார் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்வகையில் 'வெட்டுக்கிளித் தாக்குதல்' பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இருக்க, அதனை இயற்கைப் பேரிடர் என்ற வரையறைக்குள் கொண்டுவர வேளாண்மை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
வெட்டுக்கிளியால் நாசமாக்கப்பட்ட பயிர்கள் தொடர்பாக சிறப்பு ஆய்வு மேற்கொண்ட பின்பு அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக அவர், 75 நாள்களுக்கும் மேலாக நிலம், மரம், தாவரங்களைத் தாக்கிவரும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த அறிவியல், பகுத்தறிவுத் தீர்வை கண்டிப்பாக கண்டறிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: வெட்டுக்கிளி கட்டுப்பாட்டு நடவடிக்கை: முழுவீச்சில் இறங்கிய மத்திய அரசு!