கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதமரின் இந்த உத்தரவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பளித்துவரும் நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தற்போது பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், பிரதமரின் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை தங்கள் மாநிலத்தில் திறம்பட செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் செய்வதாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்துகள் தவிர மற்ற அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நடவடிக்கை ஊழல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துவிட வழிவகுக்கும் வகையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பேரிடர் சூழல்களின்போது, அத்தியாவசியமற்ற போக்குவரத்துச் சேவைகள் முடக்கும் சமயத்தில், தானாகவே அத்தியாவசிய தேவைகளுக்கான போக்குவரத்து தடைப்படுவதை தான் கண்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்தினை தடைசெய்ய வேண்டாம் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிங்க: கரோனாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வென்று காட்ட வேண்டும் - பிரதமர் மோடி