ETV Bharat / bharat

ஆடைகளை மாற்றலாம், கொள்கைகளை மாற்ற முடியாது - மம்தா பானர்ஜி!

ஆடைகளை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்ற முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
author img

By

Published : Dec 17, 2020, 12:28 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது எம்எல்ஏ பதவியை நேற்று (டிச.16) ராஜினாமா செய்ததால், கட்சியினரிடையே சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (டிசம்பர் 16) கூச் பெகர் நகரில் அக்கட்சியினருடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி, வன்முறை, பிரிவினைவாத அரசியிலில் பாஜகவினர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவரது கட்சியில் அதிருப்தியுடன் இருக்கும் தலைவர்களையும் சாடினார். அப்போது பேசிய அவர்," திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தொடக்கத்திலிருந்து இருப்பவர்கள், கடைசி வரை இங்கேயே இருப்பார்கள். மக்கள் தங்களது குணத்தை தினமும் மாற்றிக்கொண்டு இருக்க முடியாது. ஆடைகளை மாற்றலாம். ஆனால் கொள்கைகளை மாற்ற முடியாது.

கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. பஞ்சனன் பர்மா அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. ராஜ்பங்ஷி அவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்தில் ஆயிரத்து 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

ராஜ்பங்ஷி மொழி அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பிறர் குறித்து அவதூறு பரப்புவதையே வேலையாகக் கொண்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பின்னடைவை சந்திக்கிறாரா மம்தா பானர்ஜி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.