சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. வூஹான் நகரிலிருந்து கொரோனா பரவிய காரணத்தால் கொரோனாவை அமெரிக்க அலுவலர்கள் 'வூஹான் வைரஸ்' என குறிப்பிட்டுவந்தனர்.
தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறி அமெரிக்காவின் கருத்துக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்தது. வூஹான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா பரவியதை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது. அமெரிக்க படைகள்தான் வூஹான் மாகாணத்திற்கு தொற்றை கொண்டுவந்ததாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாவு லிஜியன் விமர்சித்தார்.
சீனாவிலிருந்துதான் கொரோனா பரவியது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 1,25,048 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!