ETV Bharat / bharat

பொருளாதாரத் தோல்வியை எப்போது ஒப்புக்கொள்வீர்கள் பிரதமரே?: ப.சிதம்பரம் கேள்வி! - பொருளாதார தோல்வி

நாட்டில் மூழ்கி வரும் தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்துத் துறைகளைச் சரி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

chidambaram-asks-narendra-modi-when-will-you-acknowledge-your-economic-failure

author img

By

Published : Jul 30, 2020, 3:20 PM IST

Updated : Jul 30, 2020, 3:46 PM IST

நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடி கரோனா வைரஸ் பாதிப்பால் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதோடு, பெரு நிறுவனங்களும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி பற்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியுள்ளார்.

அதில், '' நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளதை பாஜக அரசு எப்போது ஏற்றுக்கொள்ளும்? அவரின் தோல்வி மற்றும் அவரது பொருளாதார மேலாளர்களின் தோல்வி என்பதை பிரதமர் எப்போது ஏற்றுக்கொள்வார்?'' எனக் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், ''இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகமுக்கியமான இரண்டு துறைகள் தொலைத்தொடர்பும், விமானப் போக்குவரத்தும். இந்த இரண்டு துறைகளும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பின், மூழ்கும் கப்பல் போல் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, சரிவின் விளிம்பில் உள்ளது. அதனைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதை எப்போது உணர்வீர்கள்?

இதேபோல், நஷ்டத்தைச் சந்தித்து வரும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களைச் சரிசெய்ய அரசு மீட்புத் திட்டத்துடன் நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து நிறுவனங்களும் ஏர் இந்தியா காட்டிய வழியில் சென்றுவிடும்.

கடந்த 12 மாதங்களில் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இப்போது தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளும் நஷ்டமடைந்தால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரும் வேலையிழப்பர்'' எனத் தெரிவித்துள்ளார்.

வோடஃபோன் - ஐடியா தொலைதொடர்பு நிறுவனம், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. தொலைத்தொடர்பு துறை கோரியபடி அந்நிறுவனம் ரூ. 58 ஆயிரத்து 254 கோடி வழங்கவுள்ளது. இந்தத் தொகையை வழங்குவதற்காக ஒவ்வொரு காலாண்டிலும் அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வருமான வரிக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு

Last Updated : Jul 30, 2020, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.