நவி மும்பையின் பன்வேல் பகுதிகளிலிருந்து கெமிக்கல் டேங்கர் லாரி ஒன்று, வடக்கு மகாராஷ்டிராவின் சதரா மாவட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. இந்த லாரி மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, லாரியிலிருந்து கெமிக்கல் கசிவது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தானி சவுக் என்னும் பகுதியில் லாரி நிறுத்தப்பட்டது. லாரியிலிருந்து வெளியேறிய கெமிக்கல்கள், சாலையில் சிந்தியபோது நீராவியானது.
இதனை சுவாசித்த பலருக்கும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால் உடனடியாக தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், லாரியிலிருந்து கசியும் கெமிக்கலை மணலுக்கு செல்லும்படியாக மடைமாற்றியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கெமிக்கல் தொழிற்சாலைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, மாற்று டேங்கர் லாரி கொண்டுவரப்பட்டு கெமிக்கல் மாற்றப்பட்டது.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட ஸ்டைரீன் கெமிக்கல் கசிவால் பலரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: விளைவுகள் என்னென்ன?