நிலவில் செலுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று (ஜூலை 22) பிற்பகல் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. மிகக்குறைந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு நிகரான இடத்தை இந்தியாவும் அடையும்.
இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான் 2 விண்கலத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. விண்கலத்தின் என்ஜினில் ஹைட்ரஜன் எரிவாயு நிரப்பப்பட்டு விண்ணுக்குச் செல்ல தயார் நிலையில் சந்திரயான் 2 காத்திருக்கிறது.