மத்திய ரயில்வே நிர்வாகம் சேதமடைந்துள்ள பாலங்களை அகற்றுவதற்காக டெண்டர் விட்டுள்ளது. இது குறித்து மத்திய நிர்வாகம் கூறியுள்ளதாவது:
சேதமடைந்த பாலங்களை இடிப்பதற்கு முன்பாகவே மும்பையில் மார்ச் 13ஆம் தேதியன்று சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் முனையத்தின் ஓரிடத்தில் பாதசாரிகள் நடந்துசெல்லும் பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள இந்த நடைபாதை பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி ஆறு பேர் பலியாகினர். மேலும், 30 நபர்கள் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து ஆசாத் மைதீன் காவல் நிலையம், மத்திய ரயில்வே துறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும், மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும், இந்தியத் தண்டனைச் சட்டம் 304ஏ(விபத்து மூலம் இறந்துபோதல்) பிரிவு கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகர் பகுதியில் மூன்று மாடி கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.