சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,73,015 மாணவ, மாணவிகள் எழுதியதில் 17,13,121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இம்முறை 91.46 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.36 விழுக்காடு அதிகமாகும். இம்முறையும், இந்தத் தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதமாக 3.17 விழுக்காடு அதிகமாக உள்ளது.
90.14 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் 93.31 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 78.95 விழுக்காடு மூன்றாம் பாலினத்தனர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.