நாட்டையே உலுக்கிய ஊழல் வழக்கில் மிகவும் முக்கியமான வழக்கு சாரதா சிட்பண்ட் வழக்கு. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக் கூறி விளம்பரம் செய்தது. இதை நம்பி பல ஆயிரம் ஏழை, எளிய மக்கள் தங்களது பணத்தை அந்த நிறுவனத்தில் கட்டினர்.
தவணை காலம் முடிந்தும் பணம் போட்ட மக்களுக்கு வட்டியுடன் பணத்தை திருப்பித் தராமல் ரூ. 2.500 கோடி வரை மோசடி செய்தது. இதனால் பணம் போட்டவர்கள் பணத்தினை வாங்க வேறு வழியின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையில்உயிர் பலிகளும் ஏற்பட்டன.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர், மேற்கு வங்க மாநில காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கொல்கத்தா காவல்துணை ஆணையர் அர்னாப் கோஷ், மூத்த காவல்துறை அலுவலர் திலீப் ஹர்ஷா ஆகிய இருவருக்கும் நேரில் ஆஜராகும்படி சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.