ETV Bharat / bharat

காற்றை கடனாக விட்டுச் செல்வோம்! - கார்பன் உமிழ்வு

ஒரே ஒரு பூமி மட்டுமே என்ற நனவுடன், அனைத்து நாடுகளும் ஒரு கூட்டு செயல் திட்டத்திற்குத் தயாராகத் தவறினால் அது மனிதகுலத்திற்கு தற்கொலை ஆகும்.

Carbon Emissions.. suicidal to Mankind  Carbon Emissions  suicidal to Mankind
Carbon Emissions.. suicidal to Mankind
author img

By

Published : Dec 21, 2019, 11:49 PM IST

“ஆகாயம், காற்று, தண்ணீர், மண் ஆகியவற்றை வருங்கால சந்ததியினருக்கு கடனாக விட்டுச் செல்வோம். ஏனெனில் அவற்றை பரம்பரை பரம்பரையாகக் கடத்த முடியாது. ஆகவே நமது வருங்கால சந்ததியினருக்கு இதனை மாற்றுவது நமது குறைந்தபட்ச கடமையாகும்” தீர்க்கதரிசி தேசப்பிதா மகாத்மா காந்தி உதிர்த்த வார்த்தைகள் இவை.

ஆம்! இந்தப் பெரிய பூமி பற்றியெரிகிறதே, இதற்குக் காரணமான குற்றவாளிகள் யார்? என வருங்கால சந்ததியினர் நேரடியாகவே கேள்வி எழுப்பக் கூடும். கார்பன் உமிழ்வால் பூமியின் தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்படும். ஸ்வீடன் நாட்டின் மாட்ரிட் பகுதியில் உலக காலநிலை மாநாட்டை ஐ.நா. நடத்தியது.

அப்போது கிரேட்டா தன்பெர்க் என்னும் மாணவி, ஏன் கதைகளை சொல்லி நேரத்தை வீணடிக்கிறீர்கள்? உலக சுற்றுச்சூழல் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் கட்டுமானமும் சரிந்துவிட்டது உங்களின் கண்களுக்கு தெரியவில்லையா? எனக் குரல் எழுப்பினார்.

Carbon Emissions.. suicidal to Mankind  Carbon Emissions  suicidal to Mankind
கிரேட்டா தன்பெர்க்

கார்பன் உமிழ்வை சுயமாகக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளுக்கும் வரைவு வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கும், அனைத்து நாடுகளுக்கும் அதிக இலக்குகளை வழங்குவதற்கும் 2015 பாரிஸ் ஒப்பம் உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் சராசரியாக தனிநபர் கார்பன் உமிழ்வு 1.3 டன்னாக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்க 4.5 டன், சீனா 1.9 டன், ஐரோப்பிய யூனியன் 1.8 டன்னாக உள்ளது. இந்தியாவில் கார்பன் உமிழ்வு அரை டன் மட்டுமே.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 59 விழுக்காடு கார்பன் வெளியேற்றத்தை நாடுகள் ஏற்படுத்தியுள்ளன. ஐ.நா. தகவல்படி சீனா 28 விழுக்காடு, அமெரிக்கா 15 விழுக்காடு, ஐரோப்பிய ஒன்றியம் 9 விழுக்காடு, இந்தியா 7 விழுக்காடாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியதை அடுத்து, கார்பன் உமிழ்வு மீதான சுய ஒழுங்குமுறை இலக்குகளை நிர்ணயிக்க இந்தியா, சீனா மீதான அழுத்தம் இயல்பாகவே அதிகரித்துள்ளது.

எனினும் பெரிய நாடுகள் வளரும் நாடுகளின் குரலைப் புறக்கணிக்கின்றன. பாரிஸ் உடன்படிக்கை தொடர்பாக மற்றவர்களைவிட சிறந்த முடிவுகளைக் காண்பிப்பதன் மூலம் இந்தியா வரவு-செலவு செய்ய மறுத்த போதிலும், கார்பன் உமிழ்வு குறித்த அறிக்கைகளில் மட்டுப்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல், அதன் மடியில் ஒரு குழந்தையைப் போல மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களையும் வளர்த்துவருகிறது - வளிமண்டலத்தில் ஏற்பட்ட செங்குத்தான மாற்றங்களே மனிதகுலத்துடன் உண்மையில் போரை நடத்திவருகிறது.

இதில் சோகம் என்னவென்றால், மனிதகுலம் சபிக்கப்படுவது முன்னேற்றத்தின் பெயரில். ஆம், தொழில்துறை நாடுகள் புவி வெப்பமடைதலுடன் சேர்ந்து கார்பன் உமிழ்வுகளால் இயற்கையை ஏற்றத்தாழ்வு செய்யும் பாவச் செயல்களில் ஈடுபட்டுள்ளன.

28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம், கார்பன் உமிழ்வு நடுநிலைமையை (நிகர பூஜ்ஜியத்தை) அடைவதற்கான தயார் நிலையை அறிவித்தது. அந்த வகையில் இந்தியா, சீனா மீது தொடர்ந்து அழுத்தங்கள் அதிகரித்தன. ஆயினும்கூட எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 2023ஆம் ஆண்டில் பாரிஸ் ஒப்பந்த மாநாடு நடைபெறும்வரை கார்பன் உமிழ்வு தொடர்பான சுய ஒழுங்குமுறை இலக்கை எடுக்கப்போவதில்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியது.

பாரிஸ் ஒப்பந்தத்தில் கார்பன் சந்தையை அமைக்க முன்மொழியப்பட்டது. பல நன்மைகளுடன், இந்தக் கார்பன் சந்தை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைவிட கார்பன் உமிழ்வை குறைக்கக்கூடிய நாடுகளால் தங்கள் பங்கை விற்க வழி வகுக்கிறது.

எவ்வாறாயினும், இந்தப் பிரச்னை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமும் - பணக்காரர்களால் அதே பிரச்னையை சந்திக்க நேரிட்டது.

77 நாடுகள் உலக உமிழ்வில் 13 விழுக்காட்டை மட்டுமே ஏற்படுத்தினாலும், கார்பன் உமிழ்வு நடுநிலைமையை (நிகர பூஜ்ஜியம்) பராமரிக்க உறுதியளித்தாலும் என்ன நன்மை. தொழில்துறை புரட்சிக்கு முன்னர் நிலவிய 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாரிஸ் ஒப்பந்தம் நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸில் வெப்பநிலை இருக்கும் என்று அறிவியல் ஆய்வுகள் கருதுகின்றன. உலகப் பொருளாதாரம் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்கிறது. கடல் மட்டங்களில், பெரிய சூறாவளிகள், வறட்சி, வெள்ளம் உள்ளிட்டவைகள் ஏற்படுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக வளிமண்டலத்தில் செங்குத்தான மாற்றங்களின் பாதகமான பாதிப்புகளை நிராகரிக்க வாய்ப்பில்லை. பாரிஸ் ஒப்பந்தத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் கார்பன் உமிழ்வு 4 விழுக்காடு உயர்கிறது.

சுற்றுச்சூழல் அபாயம்

இந்த அச்சுறுத்தலை சரிபார்க்க விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்துவருகின்றனர். தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப், 'அமெரிக்காவிற்கு முன்னுரிமை' என்ற தனது முழக்கத்துடன், பாரிஸ் ஒப்பந்தத்தை உலகம் முழுவதையும் பெரும் நெருக்கடிக்குள் தள்ள மறுத்துவிட்டார்.

வளிமண்டல ஆபத்து குறியீட்டு அறிக்கையில் 2017ஆம் ஆண்டில் 14ஆவது இடத்திலிருந்து கடந்த ஆண்டு இந்தியா ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளது. புவி வெப்பமடைதலுடன் எந்தவொரு தேசமும் அமெரிக்காவுடன் இணைந்தாலும் சர்வதேச உடன்படிக்கைகளில் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பெரிய தொகையை செலுத்த வேண்டும்.

ஒரே ஒரு பூமி மட்டுமே என்ற நனவுடன், அனைத்து நாடுகளும் ஒரு கூட்டு செயல் திட்டத்திற்குத் தயாராகத் தவறினால், அது மனிதகுலத்திற்கு தற்கொலை ஆகும்.

இதையும் படிங்க: பாரிஸை உலுக்கியெடுக்கும் ஓய்வூதியப் போராட்டம் - மீண்டும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம்!

Intro:Body:

No need for any Indian to prove citizenship; let govt identify intruders: Bhupesh Baghel

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.