கரோனா தொற்றை கூட்டாக எதிர்கொள்ளும் வழிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த காணொலி கூட்டத்துக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்ஜே லாவ்ரோவ்(Sergey Lavrov) தலைமையேற்கவுள்ளார். இதில், உலகளவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான சாத்தியமான கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக ரஷ்ய நாட்டு ஸ்பூட்னிங் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவிலிருந்து மீண்டவர்கள் 22.17 விழுக்காட்டினர்'