ETV Bharat / bharat

விஷ சாராயத்தால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... கொலை வழக்காகப் பதிவிட முதலமைச்சர் ஆலோசனை!

சண்டிகர்: விஷ சாராயம் வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்கு பதிவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பஞ்சாப் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

m
cm
author img

By

Published : Aug 5, 2020, 9:59 PM IST

பஞ்சாபில் அமிர்தசரஸ், படாலா , டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் விஷ சாராயம் குடித்ததில் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத்தில் குறைவானவர்கள் உயிரிழந்த நிலையில், மருத்துவமனை சிகிச்சையிலிருந்த பலர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் அதிரடி நடவடிக்கையும் எடுத்தனர்.

கடந்த மே 18ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலக்கட்டத்தில் மட்டுமே சட்ட விரோத மதுவிற்பனை தொடர்பாக, 270 வழக்குப் பதிவுகளும், கடத்தல்காரர்கள் 301 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி மதுபான கும்பலை தடுக்க காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை ஒன்றும், இரண்டு மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தனிப்படையின் அதிரடி சோதனையால் பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சோதனையில், மதுபானம் தயாரிக்க பயன்படும் இரண்டு லட்சம் லிட்டருக்கும் அதிகமான மஹுவா லஹான், 1,612 லிட்டர் கள்ளச் சாராயம் , 4,606 லிட்டர் ஒயின்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட 6 காவலர்கள், 7 கலால் அலுவலர்கள், வரிவிதிப்பு அலுவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷ மதுபானம் விற்பனை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ராஜீவ் ஜோஷி, தர்மீந்தர் ஆகிய‌ இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை காணொலி வழியாக நடத்தினார்.

அதில், விஷ சாராயம் தயாரித்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும், கொலை வழக்குப் பதியப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அத்தகைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க அமைச்சர் பிராம் மோஹிந்திரா தலைமையிலான துணைக் குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தால் துயரமடைந்த குடும்பத்திற்கும், சிகிச்சை பெறுபவர்களுக்கும் தகுந்த நிதி கிடைக்கும்" என உறுதியளித்தார். முன்னதாக, விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.