உலகம் முழுவதும் கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதாரண மக்கள் தொடங்கி பெரிய திரை பிரபலங்கள் வரை பலரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான மொஹினா குமாரி சிங், அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தூங்க முடியவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் குடும்பத்தாரை விட மிகவும் சிரமப்பட்டது நான்தான். இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்தேன்.
இப்போது எல்லாம் நலமாக உள்ளது. நாங்கள் எதைப் பற்றியும் குறைகூற விரும்பவில்லை. ஏனென்றால் எங்களை விடவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.