உடலில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் இருதயத்தையும் அதன்பின்னர் நுரையீரலையும் அடைகிறது. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரையில் உள்ள ரத்த நாளங்கள் அனைத்து வேலைகளையும் செய்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களும் இருதயத்தையும், நுரையீரலையும் இந்த ரத்த நாளங்கள் மூலம் இணைகிறது.
நுரையீரல் வழியாக இருதயத்திற்குச் செல்லும் பிராணவாயு, ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பகுதிகளின் இயக்கத்திற்கு செல்கிறது. இந்த இயக்கத்தின் போது ரத்த ஓட்டத்தில் சில சமயம் ரத்த உறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலும் மூட்டுகளிலும், தொடைகளிலும் இந்த உறைவானது ஏற்படுகிறது.
இந்த உறைவின் காரணமாக ரத்த ஓட்டத்தில் வேகக்குறைவு ஏற்பட்டு, ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. சிலர் தொடர்ச்சியாக எந்த வித அசைவுமின்றி ஒரேவிதமாக அமர்ந்திருப்பது கைகால்களில் ரத்த உறைவுக்கு மூல காரணமாக இருப்பதுண்டு.
இப்பகுதிகளில் ஏற்படும் உறைவு ரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலை சென்றடைகிறது. இதன் காரணமாக நுரையீரலில் இருந்து இருதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு குறைவாக இருக்கும். இதன் விளைவாக நெஞ்சுவலி ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த சிக்கலை முன்னெச்சரிக்கையாகத் தடுக்கும் விதமாக ரத்த உறைவு சிறியளவில் இருக்கும் போதே டி-டிம்மர் (D-Dimer) சோதனை மூலம் கண்டறியலாம். அதன் பின்னர் நுரையீரலில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து இந்த உறைவை போக்கலாம். உறைவு சிக்கலாக இருக்கும்பட்சத்தில் ஆஞ்சியோப்லாஸ்ட் சிகிச்சை மேற்கொண்டு சரிசெய்யலாம். பின்னர் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த சிக்கலை நீக்கிவிடலாம்.
இதுபோன்ற ரத்த உறைவைத் தடுக்கும் வகையில் தொடர் உடற்பயிற்சி மேற்கொள்வது நலம். அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் வேலை செய்யும் சூழல் கொண்டுள்ளவர்கள் இடையில் சிறிது நேரம் அருகில் சில அடிகள் நடப்பது நலம் தரும்.
இதையும் படிங்க: உள்ளாட்சி உங்களாட்சி-1: இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உருவான கதை!