மக்களவைத் தேர்தல் முடிந்ததிலிருந்து கர்நாடக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் 13 எம்எல்ஏ-க்கள் சமீபத்தில் சபாநாயகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அதில் ஆனந்த் சிங், ராமலிங்க ரெட்டி, நாராயண கவுடா, பிரதாப் கவுடா, கோபாலையா ஆகிய ஐந்து எம்எல்ஏ-க்கள் மட்டுமே சரியான வடிவத்தில் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் மற்றவர்களின் கடிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இன்று மாலை 5 மணிக்கு பாஜகவின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.