நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதில் பாஜகவும், இந்த தேர்தலுடன் பாஜகவை ஆட்சி பொறுப்பிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் தீவிர வியூகங்கள் அமைத்து வருகின்றன. இதற்காக தற்போதிலிருந்தே கள பணிகள் ஆரம்பமாகி இருக்கின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் கோஷம் “மோடியால் சாத்தியப்படும்” என்று அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சரும், பாஜகவின் தேர்தல் பிரசார குழு தலைவருமான அருண்ஜெட்லி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 மணி நேரமும் பணியாற்றியுள்ளார்.
சிக்கலான பிரச்னைகளில் விரைந்து முடிவெடுக்கக் கூடிய அவரது நற்பெயர் பெரும்பாலான இந்தியர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் கோஷமாக “மோடியால் சாத்தியப்படும்” தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.