அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அசோம் கனா பரிசத் கட்சி ஆலோசித்து வருகிறது. இதனால், முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் தாஸ் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மூத்த ஏஜிபி தூதுக்குழு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தது. இந்த மனுக்களை நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கவுள்ளது.
இந்நிலையில், தீபக் தாஸ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், "CAAவின் அரசியலமைப்பு செல்லுபடியை சவாலாக ஏற்றுக்கொண்டு நாங்கள் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளோம். அஸ்ஸாமின் பழங்குடியின மக்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாங்கள் இந்தச் சட்டத்தில் பார்த்தோம்"
அந்த மனுவில், ' 1985ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க அஸ்ஸாம் உடன்படிக்கை, அஸ்ஸாம் மாநில மக்களின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் உரிமையைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. பழங்குடியின மக்கள் தான் அஸ்ஸாமின் கலாசாரம், எங்களின் அடையாளமாகவும் இருக்கின்றனர். அவர்களுக்காகத்தான் குடித் திருத்த சட்டத்தை ஆதரித்தோம்.
அதன் அடிப்படையிலேயே ஏஜிபி கட்சியின் எம்.பி. பிரேன் பாய்ஸ்யா குடியுரிமை மசோதாவை ஆதரித்தார். ஆனால், இதற்கு பின்னர் ஏஜிபி கட்சிக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளதால் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளது’ என்று தெரிவித்தார்.
அஸ்ஸாமில் பாஜகவுடனான உறவை ஏஜிபி முறித்துக் கொள்ளுமா?
"நாங்கள் இப்போது பாஜகவிற்கு அளித்த ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம். அதன்படி எங்கள் கட்சி செயல்படும்" என்றார்.
முன்னதாக ஜனவரி மாதம், குடியுரிமை திருத்த மசோதாவை (சிஏபி) எதிர்த்து அஸ்ஸாமில் பாஜகவுடனான உறவை ஏஜிபி முறித்துக் கொண்டது. சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அஸ்ஸாம் அரசு, மூன்று அமைச்சர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: CAA Protest: 'குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது' - உச்ச நீதிமன்றத்தில் மனு