பாட்னா: நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் (டிச.16) எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பான இந்தியா வேண்டும் எனக்கோரி பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் இணைந்து கடும் குளிரில் தரையில் படுத்து உறங்கி நூதனப் பேராட்டத்தில் ஈடுபட்டனர். Meet to Sleep எனும் பெயரில் நடந்த இந்த போராட்டத்திற்கு, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வந்தனா சர்மா என்பவர் தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர்," பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, திறந்தவெளியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது தரையில் உறங்கி இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம். அனைவருக்கும் பாதுகாப்பான இந்தியா அமைந்திட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் கட்டுமான சுவர் இடிந்து விபத்து: ஒருவர் படுகாயம்