ETV Bharat / bharat

இமயத்தில் ஒரு குடையின் கீழ் சீனாவுடனான எல்லை பாதுகாப்பு மேலாண்மை

author img

By

Published : Jun 9, 2020, 1:29 PM IST

இந்தியா - சீனா எல்லையில் நடைபெறும் இரு நாட்டு மோதல் குறித்து, 2016இல் பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதலை தலைமையேற்று நடத்தியவரான லெப்டினண்ட் ஜெனரல் (ஓய்வு) டி. எஸ். ஹூடா எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Management of LAC
Management of LAC

வெண்பனி மூடிய இமயமலைத் தொடரில் சீனாவுடனான எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு, அடிதடி தொடர்வதை ஒட்டி அனைவரது பார்வையும் நமது நாட்டின் வட எல்லையில் உள்ள லடாக் பிராந்தியம் மீதே பதிந்துள்ளது. சீன இராணுவ வீரர்கள், எல்லையைத் தாண்டி ஊடுருவியுள்ளதை அடுத்து உருவான சிக்கல் அமைதியான முறையில், சுமூகமாக தீர்க்கப்படலாம் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த பிரச்னைக்கு விரைவாகத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதல்ல. எல்லைப் பகுதியில் தற்போதுள்ள பதற்றமான சூழல், அங்குள்ள கள நிலவரம் குறித்து நிறையவே எழுதப்பட்டுள்ளதால், மேலதிக முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பாதுகாப்பு மேலாண்மை பற்றி இங்கு பார்க்கலம்.

சீன ஆக்கிரமிப்பும் எல்லை பாதுகாப்பும்

2019ஆம் ஆண்டு மட்டும், சீன வீரர்கள் 663 முறை எல்லையைத் தாண்டி, இந்திய பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவியுள்ளனர். புது டெல்லியில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்திருப்பது போல, 2018இல் நிகழ்ந்த 404 ஊடுருவல்களைக் காட்டிலும் இது மிக அதிகமாகும். ஆனால், சீனாவுடனான எல்லையில் 1975ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்பதில் நாம் நிம்மதியுடன் திருப்தி கொள்கிறோம். இருப்பினும், இரு தரப்பும் தங்களை நிலைநாட்ட மேற்கொள்ளும் கூடுதல் நடவடிக்கைகளின் தீவிரம் காரணமாக, கட்டுப்பாடும் பொறுமையும் சீர்குலைந்து, எதிர்பாராத வகையில் பிரச்னை கைமீறி பெரியதாக வெடிக்கலாம்.

எனவே, தற்போதைய சூழலைக் கணக்கில் கொண்டு, எல்லையை நிர்வகிப்பதில் உள்ள நிர்வாக குளறுபடிகளைக் களைந்து, நடைமுறைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக மறு ஆய்வு செய்வது இன்றியமையாதது ஆகும். செம்மையான எல்லை மேலாண்மையை உறுதி செய்வதுடன், பிரச்னையை பெரிதாக்க உதவும் ஒரு சிறு தீப்பொறிக்காக காத்திருக்கும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, பிரச்னைகளை முளையிலேயே கிள்ளியெறியவும், எல்லைக் கோட்டை நிலைநாட்டவும் இந்த மறு ஆய்வு உதவும்.

கார்கில் போர் தந்த படிப்பினை

கார்கில் போருக்குப் பின், தேச பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, மேலண்மை ஆகியவை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட அமைச்சர் குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கார்கில் மறு ஆய்வு கமிட்டிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட இந்த அமைச்சர் குழு, தனது அறிக்கையில் ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மையை வலியுறுத்தும் வேளையில், பொறுப்புணர்வையும் கடப்பாட்டையும் கூடுதலாகவே வலியுறுத்துகிறது.

“தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ / துணை இராணுவப் பிரிவுகள் ஒரே எல்லைப்பகுதியில் பல்வேறு தலைமையின் கீழ் செயல்படுவதால், அவற்றுக்குள் முரண்பாடுகளும், அதிகார வரம்பு, கட்டுப்பாடு குறித்த மோதல்களும் அடிக்கடி ஏற்படுகின்றன. ஒரே பணித்தளத்தில், எல்லைப்பகுதியில் பல்வேறு படைப் பிரிவுகள் ஒரே நோக்கத்தில் செயல்படுவது, மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு இன்றி, பொறுப்பை அறுதியிட்டு உறுதி செய்ய இயலாத சூழலை உருவாக்கியுள்ளது.

எனவே, பொறுப்பையும் கடப்பாட்டையும் உறுதி செய்ய, ’எல்லை ஒன்று படைப்பிரிவு ஒன்று’ என்ற கொள்கை வரைமுறையை நடைமுறைப்படுத்தி, எல்லையில் துருப்புகளையும், படை வீரரையும் பணியமர்த்த வேண்டும்” என்று அந்த ஆய்வறிக்கை தெளிவாக தெரிவிக்கிறது.

சீனாவுடனான எல்லையைப் பாதுகாப்பதில் இராணுவமும், இந்தோ - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் (ITBP) உம் ஈடுபட்டுள்ளனர். எல்லையோர ரோந்துப் பணி, கண்காணிப்பு, ஊடுருவல் தடுப்பு என இரு அமைப்புகளும் ஒரே பணியைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன. சவால் மிக்க எல்லை மேலாண்மை ITBP வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், இன்று நடைபெற்று வரும் எதிரிப் படைகளுடனான மோதலில், இராணுவமே தலைமையேற்று முதன்மையான பதிலடியைத் தருகிறது.

இதனை, நாம் கடந்த காலத்தில் தேப்சாங், ச்சூமார், டோக்லாம் ஆகிய இடங்களில் கண்டிருக்கிறோம். சம்பிரதாய சிக்கலைத் தீர்க்கும் பேச்சுவார்த்தையோ அல்லது சம்பிரதாய சந்திப்போ, எல்லையில் சீன இராணுவ அதிகாரிகளுடன் கலந்துகொள்வது நமது இராணுவ அதிகாரிகளே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

வரையறுக்கப்படாத இந்திய - சீன எல்லையின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு

இந்தியா - சீனா இடையேயான நீண்ட நெடிய எல்லை இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இரு நாட்டு ராணுவங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கொண்டே எல்லை குறிக்கப்படுகிறது. இதனால்தான், இந்த எல்லைக் கோடு Line of Actual Control என்று அழைக்கப்படுகிறது. இப்படி வரையறுக்கப்படாத எல்லையின் பாதுகாப்பில், இரு வேறு அமைச்சகங்களின் கீழுள்ள இரு படைப் பிரிவுகள் செயல்படுவது நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

ஒரே எல்லையில் பணிபுரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தனித்த திறமை, குணாம்சங்களைக் கொண்டவை மட்டுமல்ல, அவற்றின் விரிவாக்கத் திட்டங்களும் வேறுபட்டவை. இதன் காரணமாக, நமது துருப்புக்களையும், வீரர்களையும் திறம்பட பணியமர்த்துவதில் சுணக்கம் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிறது. மேலும், பொறுப்பை உறுதிப்படுத்துவதில் தெளிவு இல்லாமல் போகிறது.

எனவே, பிரச்னைக்குரிய எல்லைப் பாதுகாப்பு இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். மேலும் ITBPஇன் செயல்பாடு, இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருத்தல் அவசியம். இத்தகைய ஏற்பாடு ஒன்றும் புதிதல்ல. பாகிஸ்தானுடனான எல்லையில், எல்லை பாதுகாப்புப் படை (BSF), இராணுவத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்ப யுகத்தில் நவீன கண்காணிப்பு

இவற்றோடு மட்டும் நில்லாமல், எல்லைப் பகுதியில் முழுமையான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த நமது கட்டமைப்பை வலுப்படுத்த, கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் உள்ள எல்லைப் பிராந்திய நிலப்பரப்பும், அங்கு நிலவும் அதீத தட்பவெப்ப நிலையும், போதிய சாலை வசதி இன்மையும், கண்காணிப்புப் பணியில் நமது வீரர்கள் நேரடியாக களத்தில் இறங்குவதற்கு பெரும் தடையாக உள்ளன. விரும்பிய நேரமெல்லாம் கண்காணிப்பிலும் ரோந்துப் பணியிலும் ஈடுபட முடியாது.

வட கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை ஒட்டி, சீனா 1.25 கி.மீ தார் சாலையை எல்லைக் கோட்டுக்கு அப்பால் டூட்டிங் பகுதியில் அமைத்துள்ளது, 2018இல் தான் தெரிய வந்தது. அதுவும் ஒரு உள்ளூர் இளைஞர் சீன ஆக்கிரமிப்பைப் பற்றி அளித்த தகவலால் வெளியில் தெரிந்தது. அந்த அளவுக்கு, இந்தப் பகுதி தொலைவில் இருப்பதால் தகவல் தொடர்பை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க இந்த காலத்தில், ரோந்துப் பணி மட்டும் போதாது. மின்னணு கருவிகளையும் நிழற்பட சாதனங்களையும் கொண்டு நமது எல்லைக் கண்காணிப்பு கட்டமைப்பை தாமதமின்றி நவீனப்படுத்த வேண்டியுள்ளது. ரேடார்கள், தொலைதூர கேமராக்கள், ரேடியோ உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக அந்த கட்டமைப்பு இருக்க வேண்டும். இதற்குப் பின்புலமாக, வான்வெளி கண்காணிப்புக்கு ஏற்ற ஆளில்லாத, ஆட்களைக் கொண்ட தொழில்நுட்ப சாதனங்களும் செயற்கைக்கோள் புகைப்பட வசதியும் தேவை.

எதிரி இராணுவத்தின் எந்த ஒரு அசாதாரனமான, வித்தியாசமான நகர்வையும் கால தாமதமின்றி கண்டறிவது, நாம் விரைவான, ஒருங்கிணைந்த பதிலடி கொடுப்பதற்கு அத்தியாவசியம் ஆகும். தற்போது லடாக்கின் பாங்காங் ச்சோ பகுதியில் நிகழ்ந்தது போல, எல்லைக் கோட்டைக் கடந்து, சீன வீரர்கள் ஊடுருவினால், நிலைமை மிகவும் சிக்கலாகும். என்ன செய்வது என்று தடுமாறும் நிலைக்கு இந்தியா தள்ளப்படும்.

ஒப்பந்தகளும் நெறிமுறைகளும்

இந்தச் சூழலில், இந்தியாவும் சீனாவும் எல்லையில் நிகழும் சம்பவங்களை சீர்செய்ய இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் கூறும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைதியை நிலை நாட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவை அனைத்தும் எல்லைப் பகுதியில் சுய கட்டுப்பாடு, இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்தல், ஆத்திரமூட்டும் செயல்பாடுகளைக் கைவிடுதல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.

இவை யாவும் இன்னும் முழுமையாக செயலற்றதாக ஆகிவிடவில்லை எனினும், கள நிலவரம் கவலை தருவதாகவே உள்ளது. காரணம், தெளிவாகக் கூறப்பட்டுள்ள, இரு தரப்பும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை உதாசீனப்படுத்தும் போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து வருவதே ஆகும். இந்த விரும்பத்தகாத போக்கின் விளைவாக, எல்லையில் பணியாற்றும் வீரர்கள், அதிர்ச்சி அளிக்கும் விதமாக இராணுவ நடைமுறையைக் கொச்சைப்படுத்தும் வகையில் வசைச் சொற்களை வீசி, அடிதடியில் இறங்கியுள்ளனர். இராணுவ வீரர்களின் அதிர்ச்சியூட்டும் இந்த செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு நல்ல தொடக்கமாக, பிரச்னைக்குரியதாகக் கருதப்படும் எல்லைப் பகுதிகளில், ரோந்துப் பணியை மேற்கொள்ள சில விதிமுறைகளையும் வழிமுறைகளையும் கையாளலாம். இவை, ரோந்துப் பணி மீதான தடை உட்பட இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் கூட்டு ரோந்துப் பணியாகவும் இருக்கலாம். மேலும், அவப்போது எழும் தேவையை ஒட்டி, இவற்றில் சிற்சில மாறுதல்களை ஏற்படுத்தி சீர் செய்யலாம்.

நீண்ட நெடிய எல்லையின் அனைத்துப் பகுதிகளிலும் சுமூக முடிவை எட்டுவது அவ்வளவு எளிதன்று. ஆனால், இரு இராணுவமும் நேருக்கு நேர் மோதும் சூழல் சிறிதளவு குறைந்தாலும் அது, எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவ பெரும்பங்களிப்பை ஆற்றும். அத்துடன், வீரர்களுக்கான நன்னடத்தை விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஏனென்றால், இராணுவ உடையில் வலம் வரும் வீரர்கள், கைகளில் கம்புகளை ஏந்தியுள்ள காட்சி அதிர்ச்சி அளிக்கிறது.

நமது வட எல்லையில் போர் மூண்டால், அது இந்தியா, சீனா அகிய இரு நாடுகளுக்குமே பேரழிவைத் தரும். ஆனால், போர் மூளும் என்னும் அச்சம், நமது எல்லைப் பாதுகாப்பு மேலாண்மையில் உள்ள குறைபாடுகளை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்துவதைத் தடுக்காது. எனவே, இந்த குறைபாடுகள் இனியும் தாமதமின்றி விரைவாக சீர் செய்யப்படவேண்டும்.

இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: கலைக்கப்பட்ட மினியாபோலிஸ் காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.