ETV Bharat / bharat

இயல்புநிலைக்கு மாறும் மேற்கு வங்கம் - health safety protocols to start metro

கொல்கத்தா : மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே துறைக்கு மேற்கு வங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ரயில்
ரயில்
author img

By

Published : Aug 29, 2020, 7:17 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளைத் தொடங்க மேற்கு வங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை செயலர் அலாபன் பந்தோபாத்தியாய், ரயில்வே துறைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தகுந்த இடைவெளி, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாநிலத்தில் உள்ளூர் ரயில் சேவையை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

உள்ளூர் ரயில்வே சேவையை தொடங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநில அரசுடன் ஆலோசனை செய்யலாம்" என‌க் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையான மெட்ரோ சேவையையும், மாநிலத்தில் நான்கில் ஒரு பங்கு உள்ளூர் ரயில்களையும் இயக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அனுமதி அளித்திருந்தார். சுகாதார வழிகாட்டுதல்களுடன் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ரயில்களை இயக்க அவர் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.