கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவு வனச்சரகப் பகுதியில் யானைக்கன்று ஒன்று தாயைப் பிரிந்து தனியாக தேயிலைத் தோட்ட பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி தோட்டக்காரர்கள் அந்த யானைக்கன்றைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து நேற்றிலிருந்து யானைக்கன்றை காட்டுக்குள் விடும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இருந்தும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த வண்ணமே உள்ளது.
இது குறித்து தென்மலை வனச்சரக வனத் துறை அலுவலர் அஜீஸ் கூறுகையில், “சரியாக ஓராண்டேயான அந்த யானைக்கன்றை காட்டில் விடுவதற்கு தொடர்ந்து முயற்சித்துவருகிறோம். விரைவில் யானையை காட்டில் விட்டுவிடுவோம்” என நம்பிக்கைத் தெரிவித்தார்.