நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.
இதையொட்டி, நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தியைச் சுற்றி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.