கனமழை காரணமாக அசாம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமானோர் தங்களது வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அசாமின் காம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் வீடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அவர் விளைவித்த காய்கறிகள், பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.
இதனால் மனம் நொடிந்துபோன அந்த விவசாயி துயரம் தாங்க முடியாமல் புத்திமாரி நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட கிராம மக்கள் நதிக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர்.
அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் இதுகுறித்து கூறுகையில், "அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. கொசு வலை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் இன்னும் எங்களை வந்தடையவில்லை" என்று தெரிவித்தார்.