இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தெலங்கானாவில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகள் தமது தாயகத்திற்கு திரும்பிச் செல்லும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு ஆளாகக்கூடாது. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்துதரும்.
ரயில் சேவைகள் கிடைக்காவிட்டால் தொழிலாளர்களின் பயணத்திற்கு தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து தரப்படும். எந்தவொரு வெளிமாநிலத் தொழிலாளியும், அவர்களது சொந்த ஊருக்குச் செல்ல நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கக்கூடாது என்பதையும் உறுதிசெய்து தரவேண்டும்.
வெளிமாநிலத் தொழிலாளர்களையும், குடிபெயர்ந்தவர்களையும் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை தெலங்கானா அரசு ஏற்றுக் கொள்ளும். அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்துதர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ் கூறுகையில், “தங்களது தாயகத்திற்கு செல்ல விரும்பிய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இதுவரை 6 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது. 75 சிறப்பு ரயில்களை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் மூலமாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க : மூன்று மாதங்களுக்கான மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் - சந்திரபாபு வலியுறுத்தல்