ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், வேல்துருத்தி பகுதியில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கியவர்களின் கூக்குரல் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 13 பயணிகள் இறந்ததாகவும், 25-க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.