மல்கன்கிரி (ஒடிசா): தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா காட்டாற்றைக் கடந்து வேலைக்குச் செல்லும் அங்கன்வாடி பணியாளார்களுக்கு ஃபைபர் படகு கொடுத்து உதவியுள்ளார்.
இரண்டு அங்கன்வாடி தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் எவ்வாறு கடுமையான காட்டாற்றைக் கடந்து வேலைக்குச் செல்கிறார்கள் என்பதை ஈடிவி பாரத் வெளிக்கொணர்ந்தது. அவர்கள் வெற்றுப் பானைகளை இடுப்பில் கட்டி, காட்டாற்றைக் கடந்த காணொலி இணையத்தில் வெகுவாக ஊடுருவியது.
இங்கு 80 மீட்டர் நீளமுள்ள பாலம் கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்துவருகிறது என்றும், ஆனால் இதற்கு சிறிது காலம் ஆகலாம் எனவும் மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சூழலில், இம்மக்களுக்கு உதவ, ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார். அதாவது, அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றைக் கடக்க ஃபைபர் படகையும், தேவையான உபகரணங்களையும் வழங்க முன்வந்துள்ளார்.