டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ள 'இன்வெஸ்ட் இந்தியா' நிறுவனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020-ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை பெற்றுள்ள இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். சுமூக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் அளித்து, முதலீடு செய்வதற்கு விரும்பத்தக்க இடமாக இந்தியாவை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும், பிரதமர் நரேந்திர மோடியின் சோர்வறியாத நடவடிக்கைகளையும் தொலைநோக்குத் தலைமையையும் இந்தச் சாதனை எதிரொலிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்வெஸ்ட் இந்தியா, இந்தியாவின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி நிறுவனம், இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கான செயல்படும் அமைப்பாக விளங்குகிறது. இது 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு லாப நோக்கமற்ற முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐநா விருதுபெறும் இன்வெஸ்ட் இந்தியா