கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும் இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் உள் துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அமித் ஷா “உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, கலாசாரம் மேலும் வலுப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
-
श्री राम जन्मभूमि कानूनी विवाद के लिए प्रयासरत; सभी संस्थाएं, पूरे देश का संत समाज और अनगिनत अज्ञात लोगों जिन्होंने इतने वर्षों तक इसके प्रयास किया मैं उनके प्रति कृतज्ञता व्यक्त करता हूँ।
— Amit Shah (@AmitShah) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">श्री राम जन्मभूमि कानूनी विवाद के लिए प्रयासरत; सभी संस्थाएं, पूरे देश का संत समाज और अनगिनत अज्ञात लोगों जिन्होंने इतने वर्षों तक इसके प्रयास किया मैं उनके प्रति कृतज्ञता व्यक्त करता हूँ।
— Amit Shah (@AmitShah) November 9, 2019श्री राम जन्मभूमि कानूनी विवाद के लिए प्रयासरत; सभी संस्थाएं, पूरे देश का संत समाज और अनगिनत अज्ञात लोगों जिन्होंने इतने वर्षों तक इसके प्रयास किया मैं उनके प्रति कृतज्ञता व्यक्त करता हूँ।
— Amit Shah (@AmitShah) November 9, 2019
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து அமைதி காத்து ‘ஒரே இந்தியா வளமான இந்தியா’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்தப் பதிவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு