ETV Bharat / bharat

கரோனா: தமிழ்நாட்டுக்குதான் அதிக ரெட் - Three zones Indian district

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மூன்று பிரிவுகளின் கீழ் இந்தியாவின் மாவட்டங்கள் பிரிக்கப்படவுள்ள நிலையில் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் கரோனா தீவிரமாக அதிகம் கொண்ட மாவட்டங்கள் உள்ளன.

health ministry
health ministry
author img

By

Published : Apr 16, 2020, 10:02 AM IST

இந்தியாவின் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் அகர்வால் தலைமையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியாவில் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கப்பட்டன.

கரோனா பாதிப்பு மற்றும் அதன் தாக்கத்தைக் கொண்டு சிவப்பு, பச்சை, வெள்ளை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டகளையும் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, நோய் தொற்று தீவிரமாக உள்ள 170 மாவட்டங்கள் சிவப்பு மாவட்டங்களாவும், குறைவான தாக்கம் உள்ள 207 மாவட்டங்கள் வெள்ளை மாவட்டங்களாகவும், வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படாத 353 மாவட்டங்கள் பச்சை மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில்தான் அதிக சிகப்பு மாவட்டங்கள்:

மேற்கண்டவாறு பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிகளவிலான சிவப்பு மாவட்டங்கள் நோய் தொற்று தீவிரமாக உள்ள மாவட்டங்களை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் 22 சிவப்பு மாவட்டங்கள், ஆந்திராவில் 16 சிவப்பு மாவட்டங்கள், மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள், உத்தரப் பிரதேசத்தில் 13 மாவட்டங்கள், ராஸ்தானில் 12 மாவட்டங்கள், டெல்லியில் 10 மாவட்டங்கள் உள்ளன.

அதேசமயம், நோய் தொற்று தற்போதைக்கு பதிவில்லாத மாநிலங்கள், யூனியன் பிரதேச பட்டியலில் சிக்கிம், மணிப்பூர், லட்சத்தீவு, தாத்ரா நகர், தாமன் தயூ ஆகியவை உள்ளன.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்கு பி.சி.ஆர். கருவிகளை வழங்கிய டாட்டா நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.