காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. மூன்று ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவி செய்துள்ளது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப் பதிந்து அமலாக்கத் துறையும், சிபிஐ-யையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்னிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வரும் மே 4ஆம் தேதிக்குள் இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் முடித்து வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : 'கார்த்தி சிதம்பரம் ரூ.10 கோடி கட்டிவிட்டு லண்டன் செல்லலாம்' - உச்ச நீதிமன்றம்